பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவிற்கு  பிரியாவிடை நிகழ்வு

0
88

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 40 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறும் பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவிற்கு   பிரியாவிடை நிகழ்வு.

நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி சுமார் 40 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தில் இருந்து (26) ஓய்வுபெற்ற  லயனல் குணதிலக்கவிற்கு  பிரியாவிடை நிகழ்வு (25) நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.பிரேமலால் ஹெட்டியாராச்சி தலைமையில், ஓய்வுபெறும் பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவுக்கான அணிவகுப்புக்கு நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.அனுருத்த ஹக்மான தலைமை தாங்கினார்.

கண்டி சில்வெஸ்டர் பாடசாலையில் கல்வி பயின்ற லயனல் குணதிலக்க   20.01.1985 இல் உப பொலிஸாரானார். பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைந்து வடக்கு கிழக்கு உட்பட தீவின் பல பிரதேசங்களில் பல பதவிகளில் கடமையாற்றிய  லயனல் குணதிலக்க   பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

அதேவேளையில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணிபுரிந்து நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

லயனல் குணதிலக்க , பொலிஸ் சேவையில் கடமையாற்றிய காலப்பகுதியில் தனது பல செயற்பாட்டு கடமைகளின் காரணமாக பல பதக்கங்களை பெற்றுள்ளதுடன், தனது பொலிஸ் சேவையில் சிறந்த பொலிஸ் உத்தியோகத்தராக தனது சேவையை ஆற்றியுள்ளார்.

ஆ.ரமேஸ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here