அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள் துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 3 பேரையும் எதிர்வரும் 22 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் (19) உத்தரவிட்டார்
இதுபற்றி தெரியவருவதாவது
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் குறித்த கட்சியின் தேர்தல் பிரச்சாரம் சம்பவதினமான நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தம்பட்டைவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று நகர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா.; இதன் போது குறித்த கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை முடிவடைந்த வாகனங்களில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்துக் கொண்ட நிலையில் அக்கரைப்பற்று நகர்பகுதியில் குறித்த காரை விசே அதிரடிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்
இதன் போது காரில் இருந்தவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள், 200 துண்டுபிரசுரங்கள், மோதிர அளவு எடுக்கும் கேர்வை என்பவற்றுடன் 3 பேரை கைது செய்ததுடன் காரையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட வரும் 2015 ஆம் ஆண்டு துப்பாகியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஒருவரும், சித்தாண்டி, மற்றும் வெலிகந்தை தரப்பளை பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினரது ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது
இதனையடுதது கைது செய்தவர்களை அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் இவர்களை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து இவர்களை எதிர்வரும் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டாh.;
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.