மகனின் பிறந்தநாளுக்காக பாடலை பரிசாக கொடுத்த தந்தை

0
185

முன்னாள் ஊடகவியலாளராகவும் தற்போது, முழு நேர இசையமைப்பாளராக செயற்பட்டு வரும் விக்கி விக்னேஷின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தனது மகன் நவீவ் ஏரோனின் 10ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘வழித்துணை’ என்ற காணொளி பாடல் வெளியாகியுள்ளது.

இது பற்றி விக்கி விக்னேஷ் கூறும் போது,

எனது மகன் பிறந்ததிலிருந்து சில வருடங்களில் ஒலிப்பதிவான அவரது குரல்பதிவுகள் மற்றும் ஒளிப்பதிவான காணொளி, படங்கள் போன்றவற்றைக் கொண்டு இந்த காணொளி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் பின்னணி இசையில் தாள ஒலிகளுக்கும் 2-4 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலியின் மாதிரிகள் (சாம்பிள்கள்) பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

பாடல் வரிகள், பாடலுக்கான இசை, குரல் மற்றும் ஒலிக்கலவை என்பன விக்கிவிக்னேஸ் ஆகிய என்னால், கொட்டாஞ்சேனையில் உள்ள எனது கலையகமான ஸ்டூடியோ 51ஹெட்ஸில் (Studio 51Hz) முன்னெடுக்கப்பட்டது.

Video link –

https://youtu.be/T3Yq114pn7o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here