மக்களை விழிப்புணர்வூட்டும் தேசிய மக்கள் சக்தியின் 45 நாட்கள் வேலைத்திட்டம் ஆரம்பம்

0
95
தேசிய மக்கள் சக்தி (NPP) இன் மக்களை விழிப்புணர்வூட்டும் 45 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை அக்கட்சியின் பிரமுகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய  கல்முனைத் தொகுதியின் நற்பிட்டிமுனைபகுதி  மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்காக தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்கள் சனி மற்றும் ஞாயிறு  இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு கல்முனைத் தொகுதியின் நற்பிட்டிமுனை  மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்காக  தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரச்சாரத்திற்காக  வருகை தந்த  குழுவினரை  அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் வரவேற்றதுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்திலும் இணைந்து கொண்டனர்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின்   துண்டுப்பிரசுரங்கள் யாவும்  கல்முனைத் தொகுதியின் நற்பிட்டிமுனை  மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்காக பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

இச்செயற்பாடானது எதிர்வரும்    தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.தற்போது  தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here