மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம் ‘ ஓவியக் கண்காட்சி’

0
63

வடகிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் 150 இற்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா கலந்து கொண்டு நீதிக்கான பயணம் எனும் ஓவியக் காண் காட்சியை

இவ் ஓவிய காண்பிய நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 500 இற்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்கள் இதில் பங்கேற்று ஓவியங்களை பார்வையிட்டிருந்தனர்.

இவ் ஓவிய கண்காட்சியில் தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமலை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here