மட்டக்களப்பில் காணாமல் போன உறவுகள் நீதிகோரி ஆர்ப்பாட்டம்

0
11

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்;கம் சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி ஆர்ப்;பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நா.உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நா. உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறுவுகள் ஒன்று கூடினரர்.

இதனையடுத்து ஒன்று கூடியவர்கள் காணாமல் ஆக்கப்பட்வர்களின் புகைகப்படங்கள் மற்றும் கொலைகாரர்களால் நீதி வழங்க முடியுமா? நாங்கள் கேட்பது இழைப்பீடையே மரண சான்றிதழையே அல்ல முறையான நீதி விசாரணையை, எமது உரிமை எமது எதிர்காலம் எப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட ஊர்வலர் ஆரம்பித்து அங்கிருந்து நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்தது

அதனை தொடர்ந்து காந்திபூங்காவில் நீதி கோரி 11.00 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here