மட்டு, தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு புதிய கட்டிடம் திறந்து வைப்பு

0
30

 

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஜப்பான் நாட்டு நிதி நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கட்டிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கிழக்கு மாகாண சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன திறந்து வைத்தர்.வேள்ட் விஷன் நிறுவனம் ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபா செலவில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன்  திட்டத்தின் கீழ்  சிறுவர் மற்றும் பெண்கள் வீட்டு வன்முறை மற்றும் துஸ்பிரயோகங்கள், சமூக விரோத செயல்பாட்டினால்  பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்வு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இடம்பெற்றது.

அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட  பொலிஸ்மா  அதிபர் அஜித் ரோகண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சுகத் விஸாந்த, சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் அமல் ஏ எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை சம்பிராய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here