மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி நேற்று திங்கட்கிழமை முதல் இரு பஸ்சேவைகள் நடாத்தப்படவுள்ளன. ‘அல்கில்மதுல் உம்மா அமைப்பின்’ அனுசரணையுடன், கிண்ணியா வலயக்கல்வி அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸ்ஹர்கான் தலைமையில், அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான கஸ்ஸாலி முஹமட் பாத்திஹ்னால் இந்த பஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாவது பஸ் சேவையானது கிண்ணியாவின் கிராமப்புறமான நடுவூற்று, ஊடாக வான்எல வரை செல்கிறது. இரண்டாவது பஸ் சேவையானது முள்ளிப்பொத்தானை வரை செல்கிறது.
தற்போது, நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியே, இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.