அனைத்துவிதமான உள்ளுர் மதுபானங்களின் விலைகளும் இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயாலும் பியர் டின் ஒன்றின் விலை 30 ரூபாயாலும் அதிகரிப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல அனைத்து உள்ளுர் சிகரெட்டுகளின் விலைகளும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் nதெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.