புதிதாக பதவியேற்றுள்ள அரச தலைவர் அனுரகுமார திசநநாயக்கவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது.
அரச தலைவரின் பணிமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தனவும் பங்கேற்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் செயல்முறை உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பாக சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.