மன்னாரில் கொவிட் அகலவில்லை. – நான்காவது பூஸ்டர் அவசியம்

0
284

COVID பெருந்தொற்று இன்னமும் சமூகத்தை விட்டு அகவில்லை ஆகவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நோயாளர்கள் நான்காவது தடுப்பூசியை அதாவது இரண்டாவது பூஸ்ரர் தடுப்பூசியை போடுவது சிறந்தது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 15.06.2022 அன்று 06 கோவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதனால் மன்னாரில் கோவிட் பெருந்தொற்று இன்னமும் மன்னார் சமூகத்தை விட்டு விலகவில்லையென தோன்றுகின்றது

இந்த மாதம் (யூன்) இதுவரை 10 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 4027 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் இந்த நடப்பு வருடத்தில் (2022) 845 பேர் இவ் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டகால நோயாளர்கள் கட்டாயமாகவும் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் விருப்பத்தின் அடிப்படையில் தமது நான்காவது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது நலம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவர் வழங்கப்படும் நிலையம் திகதி ஆகியவற்றை உங்கள் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகர் அல்லது குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here