மருத்துவ, பொறியியல், வர்த்தக பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

0
144

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் கடந்தவருடம் தோற்றி மருத்துவ, பொறியியல், வர்த்தக பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை காலை பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீடங்களுக்குத் தெரிவான மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களின் பங்குபற்றலுடன் கௌரவிக்கப்பட்டனர்.

 

நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்

இதன் போது மாணவர்கள் பெற்றோர்கள் சகிதம் உயர்தர வகுப்பு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பாண்டுவாத்திய அணியினரால் இசை முழக்கத்துடன் வரவேற்று அழைத்துவரப்பட்டு, மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையிலிருந்து இவ்வருடம் மருத்துவத் துறைக்கு 16 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 11 மாணவர்களும் வர்த்தகத் துறைக்கு 5 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here