அரசாங்கமும் மலையகத்தில் ஆடுபவர்களின் ஆட்டமும் இன்னும் மூன்று மாதங்கள் மாத்திரமே அதன் பின்னர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான அரசாங்கத்தின் மலைய வீடமைப்பு அமைச்சர் நானே என தொழிலாளர் தேசிய சங்க தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சாமிமலை மாநெலு மற்றும் மாகொல தோட்டத் தொழிலாளர் நன்மைக் கருதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களின்
ஏற்பாட்டில் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கும் இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டன.
கூரைத்தகரங்களை வழங்கி வைத்த அவர் மேலும் உரையாறியதாவது…
மலையகத்திலே முன்னாள் அமைச்சர்கள் செய்த வேலைத்திட்டங்களை குறை கூறிக்கொண்டு வாயிலே வடை சுட்டுக்கொண்டிருகிறார் இன்னாள் அமைச்சர்.
இந்திய அரசின் நிதியுதவியில் கிடைத்த நீண்ட காலமாக ஆரம்பிக்கப்படாதிருந்த 4000 வீட்டுத்திட்டத்தை நானே செய்து முடித்தேன் அதே போல மேலதிகமாக இந்தியா அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்றுள்ள 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தையும் இன்னும் மூன்று மாதங்களில் நானே செய்துத்தருவேன்.
நான் கட்டிய வீடுகளை குருவிக்கூடு என்றார்கள் சிலப் வீடு கட்டித்தரப்போவதாக கூறித்திரிந்தார்கள் எங்கே சிலப் வீடு?
மலையக மக்கள் தற்போது கல்விக்கற்ற சமூகமாக முன்னேறி விட்டார்கள் இனியும் எங்களது மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற முடியாது.
அதே போல தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வில் அனைத்து தொழிற்சங்க தலைமைகளின் ஒரு மித்த குரலாக சம்பள அதிகரிக்க வேண்டும் என்ற நிலைபாட்டிலேயே இருக்கிறோம் ஆனால் சிலர் காட்டிக்கொடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் விபச்சாரம் செய்வதாகவும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் நான் அமைச்சராக இருந்த காலத்திலே தோட்ட துறைமாரை தாக்கவில்லை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சினைகள் தீர்த்து வைத்தேன்
மக்களை உசுப்பேற்றி வீரம் காட்டுபவன் நான் அல்ல ஆகவே ஆடுபர்களின் ஆட்டம் இன்னும் மூன்றுமாதங்கள் மட்டுமே அதன் பின்னர் சஜித் பிரேததாச வின் தலைமையிலான அரசாங்கத்தின் சிறுதோட்ட உடமையார்களாக ஆக்கி நிறந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.
ரஞ்சித்ராஜபக்ஷ