மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காலநிலையால் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளதுடன் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் காற்றுடன் கூடிய அடை மழையினால் நுவரெலியா மாவட்டம் தியகல – நோட்டன் வீதியில் மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதி போக்குவரத்து முற்றாக தடைப்படுள்ளதாகவும் மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் நான்காம் கட்டைப்பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொசல்ல ஹைய்ட்றி தோட்டப்பகுதியிலுள்ள ஆறு பொருக்கெடுத்துள்ளமையினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுகந்துள்ளள்ளமையினால் குடியிருப்புகள், உடமைகள் சேதமாகியும் , வீட்டு வளர்ப்பு பிராணிகளும் உயிரிழந்துள்ளது.
மேலும் நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து நீர் வழிந்தோடுவதுடன் காசல்றி ,மேல்கொத்மலை, மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
நோட்டன் நிருபர்