பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கான பொருளாதார ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொள்ள மற்றும் பெண் தலைமைத்துவ சிறு வியாபாரங்களை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளில் “விழித்தெழு பெண்ணே ” கனடா அமைப்பினால் Thondaman Professional Training Centre – Hatton இல் கடந்த ஏப்ரல் மாதம் 2024 இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் முதற்கட்டமாக தேர்வுசெய்யப்பட்ட 30 பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளாக ”காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக நிதி உதவி வழங்கப்பட்டு அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் நேற்றைய தினம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது .
இச்செயல் திட்டம் மலையக பகுதிகளில் “விழித்தெழு பெண்ணே ” கனடா அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செயற்திட்டம் என்பதுடன் இச் செயற்திட்டத்தின் அடைவு மட்டங்களை கவனமாக பகுப்பாய்வு செய்து எதிர்கால மலையக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளுக்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைப்பின் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது .
நேற்றைய நிகழ்வில் அமைப்பின் நிறுவுனர் திருமதி சசிகலா நரேந்திரா நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடு கலந்து உரை நிகழ்த்தினார் . இச்செயற்திட்டத்தை முன்கொண்டு செல்வதில் துணைபுரிந்த விழித்தெழு பெண்ணே கனடா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு (DR) நரேந்திரா அவர்களுக்கும் நேற்றைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த சகோதரன் அர்ஜுன் ஜெயராஜ் மற்றும் இந்நிகழ்வுக்கான செயற்திட்ட அதிகாரி செல்வி கனிஷ்டா மைக்கல் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் “விழித்தெழு பெண்ணே ” கனடா அமைப்பின் சேவைகள் மலையகமெங்கும் எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொண்டார் .