இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (05) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக இந்திய அரசினால் இலங்கைவாழ் இந்திய சமுதாயத்தினருக்கும், இலங்கை நாட்டிற்கும் தொடர்ச்சியாக வழங்கி வரும் உதவிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஜீவன் தொண்டமான் பிரதமர் நரேந்திர மோடியிடம் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
மலையக மக்கள் சார்பாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும் சந்தித்து கலைந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இதன்போது இந்தியா அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 14,000 வீட்டுத்திட்டம் , மலையக பாடசாலைகளுக்கான திறன் வகுப்பரை(Smart class room) ,மலையக மாணவர்களின் கல்வி நலனிற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்து(STEM) மலையக பெந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கியமைக்கு நன்றிளை தெரிவித்தோம்.
மேலும் இந்தியாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான ETC ஒப்பந்தம் அமுல்படுத்துவது தொடர்பாகவும் வலியுறுத்தினோம். அத்தோடு இந்திய பிரதமரிடம் மலையக மக்களுக்கு நிரந்தர தீர்வாக காணி உரிமை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.
அத்தோடு டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை மலையகத்தின் சுகாதாரத்துறையை மேன்படுத்துவது தொடர்பாக குழுவொன்றை நியமிப்பது தொடர்பாகவும் பாரத பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்குவதற்கும் கவனம் செலுத்தினோம்.
அத்தோடு 1964 ஆண்டு இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையில் கொண்டுவரபட்ட சிறீமாசாஸ்திரி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தமம் ஒன்று தற்போதைய காலத்தில் கைச்சாத்திடல் அவசியம் என்றும் இதில் மலையக மக்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளடக்கபடவேன்டும் எனவும் கேட்டுக்கொண்டேன்.
மலைய மக்களுக்கு சலுகையை விட உரிமை அத்தியவசியமானது அதனால் தான் மலையக மக்களுக்கு காணி உரிமை தொடர்பாக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றோம்.
இதன்போது இலங்கைகக்கான இந்திய முன்னாள் தூதுவர் கோபால் பாக்கேல் மற்றும் தற்போதைய தூதுவர் சாந்தோஷ் ஜா மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலநிதி ஜெயசங்கர், இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தேன்” என கருத்து வெளியிட்டிருந்தார்.