நுவரெலியா மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவும் பிரசார நடவடிக்கைகளுக்கும் மலையக மக்கள் பிரதிநிதிகள் மதுபானம் வழங்குவதாகவும் தரம் குறைந்த கள்ளு வழங்குவாதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஞ்சுள கஜநாயக தெரிவித்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் தற்போது கல்விக்கற்ற சமூகமாக மாற்றம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கற்றவர்கள் இருக்கிறார்கள் ஏராளமான பட்டதாரிகள், அரச தனியார் துறைகளின் உயர் பதவிகளில் மலையகத்தவர்கள் உருவாகி இருக்கிறார்கள் .
ஆகவே சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் சமூகமாக எங்களது மலையக சமூகம் வளர்ச்சிபெற்றுள்ளது எனவே நுவரெலியா மாவட்ட மக்கள் மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் மதுபானத்திற்கு அடிமையாகி வாக்களிக்கும் நிலையில் இல்லை எனவே மலையக மக்களை இழிவுப்படுத்தும் மஞ்சுள கஜநாயக வின் கருத்தை கண்டிப்பதோடு இம் முறை நாட்டுமக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.