மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – இ. தொ. கா உயர்மட்டக் குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0
388

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வை வழங்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளார். என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியது.
 நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக்  கொடுக்கும் தனது முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவிடம்  வேண்டுகோள் விடுத்த  ஜனாதிபதி, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த விடயங்களை  தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
 ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மலையக மக்கள் எதிர் நோக்குகின்ற நடைமுறை பிரச்சனைகள் பற்றியும், தொடர்ச்சியாக கோரிக்கைகளாகவே இருந்து வருகின்ற  பிரச்சனைகள் பற்றியும்
 ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில் பிரதானமாக
 நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருந்த பிரதேச செயலகங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  சமூர்த்தி திணைக்களத்தினூடான சேவைகள் பெருந்தோட்ட பிரதேசத்தின் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் விஸ்தரிக்க பட  வேண்டும். மற்றும் ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் அனுமதி நடைமுறை காலம் கடந்ததாக காணப்படுகின்றது. இந்த அனுமதி நடை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மலையகப் பகுதிகளுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பண்டங்களை பற்றாக்குறை ஏற்படுவதை நிவர்த்தி செய்து  அவற்றை கிரமமாக  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து செலவுகள்
அதிகரித்துள்ளதால் தோட்டங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமான உணவு விநியோகத்தை மேற்கொண்டு மக்களின் நாளாந்த தேவைகளை நிவர்த்தி கொள்வதற்கான நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்பன உள்ளிட்ட எமது பிரதான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.
 இந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் அமைக்கப்படுகின்ற சர்வ கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்தது. என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here