மலையக ரயில் மார்க்கத்தில் நாவலப்பிட்டிய ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா வரை 15 இடங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலையக ரயில் போக்குவரத்தை சீர்செய்ய சில நாட்கள் செல்லும் என நாவலப்பிட்டி ரயில் கட்டுபாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய, இங்குருஓயா, கலபொட, ஹட்டன், வட்டவளை, தலவாக்கலை, கிரேட் வெஸ்டன், நானுஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரண்டு ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஸ