மஸ்கெலியா பிரதேச சபைக்குற்பட்ட தோட்டப்பகுதிகளுக்கு அமைச்சர் விஜயம்

0
155

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குற்பட்ட முள்ளுகாமம், லக்ஸபான, வாழமலை, ஸ்ரஸ்பி, ஸ்டொக்கம் ஆகிய தோட்டப்புற ங்களுக்கு நேரடி கல விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்

15.06.2024. அன்று மஸ்கெலியா பிரதேச சபைக்குற்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் நலன் பற்றி விசாரித்ததுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துக்கொண்டார்.

குறிப்பாக நாளாந்த சம்பளம்,காணி உரிமை, வீடமைப்பு , எதிர்கால மக்கள் பொறுளாதார மேம்பாடு தொடர்பாக விரிவாக கருத்துறைத்தார்.

நாட்சம்ளம் 1700 ரூபாய் வழங்குவதற்காக தேயிலை பரிக்கும் அளவினை தீர்மானிப்பது குறித்த தோட்ட மக்களே அன்று, எவ்விடத்திலும் நான் இத்தனை கிலோ தேயிலைக் கொழுந்துதான் பறிக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை என்றும் எவ்வித ஒப்பந்தங்களிளும் கைச்சாத்திடவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றுத் தொழிற்சங்கங்கள் பெறுந்தோட்ட நிறுவனங்களை கண்டு அஞ்சும் இவ்வேலையில் இ.தொ.கா மாத்திரமே மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வருதாகவும், எக்கட்டத்திலும் எனது சமூகத்திருடன் இனைந்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பெருந்நோட்ட தொழிலாளர்கள் கனிசமாக வாழக்கூடிய இக்காலக்கட்டத்தில் அவர்களுக்காக வெறுமனே 14000 வீடுகளை மாத்திரம் நிர்மானித்து வழங்குவது கண்துடைப்பு என்றும், இதற்காக அனைவரினதும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்காகவே காணி உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தினை தான் அமைச்சினூடாக ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுள், உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இம்மக்கள் சந்திப்பில் இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஷ்ட இயக்குனரும் தொழிற்சங்க தேசிய அமைப்பாளருமான லோகதாஸ், முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் சென்பகவள்ளி, அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் உட்பட பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here