மாடுடன் மோதியதில் சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே கிளிநொச்சி, இரணைமடு பஸ் விபத்துக்கு காரணமென , பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் (A9) வீதியின் 247 ஆவது கி.மீ. பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்றே விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின்போது குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகளில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 1 1⁄2 வயது ஆண் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.