அட்டன் கல்வி வலயம் கார்பெக்ஸ் கல்லூரியின் 2022 ஆம் ஆண்டுகான மாணவர் பாரளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நேற்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பரசுராமன் சங்கர் தலைமையில் இடம்பெற்ற இந் மாணவர்களின் வாக்களிப்பில் 90 சதவீதமான மாணவர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
மாணவர் பாராளுமன்ற தேர்தலில் 80 மாணவர்கள் போட்டியிட்டதுடன் 60 மாணவர்கள் மாணவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளர்.
வாக்களிப்பின் போது கண்காணிப்பு குழுவினர்களாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களாக மு.இராமச்சந்திரன், எ.காமராஜா, வீ.அருள்ஞானம் , லெதண்டி கிராம உத்தியோகஸ்தர் சன்முகராஜா மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கலந்து கொண்டனர்.