மாமனாரின் இறுதிகிரியைக்குச் சென்ற மருமகன் பரிதாகரமாக உயிரிழப்பு

0
353

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு சென்ற மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறிவருந்தன. சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்காக சென்றிருந்த மருமகன் மீது குறித்த வீட்டு வளாகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here