மின்சாரம் தாக்கி பலியான தோட்ட தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோருகிறது இ.தொ.க

0
228
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம கிழக்கு 03ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியும், மூன்று பிள்ளைகளின் தந்தையுமாகிய இராமகிருஸ்ணனுக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீட்டு நட்டயீடு வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் அமைச்சு,மற்றும் தொழில் ஆணையாளர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளிக்கு வயது 45 ஆகும். குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில்,அவரின் வசிப்பிடம் அமைந்துள்ள இடத்திற்குறிய விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது  தோட்டத்தில் பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியிலிருந்து பாய்ச்சலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (05) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தொழில் திணைகளத்தின் ஆணையாளர், மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் அதிகாரிகளையும்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மின்சாரம் தாக்கி பலியான தோட்ட தொழிலாளிக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக இ.தொ.கா சார்பாக பல்வேறு நிபந்தனைகளை  முன்வைத்தது .
மேலும் மின்சாரம் தாக்கி பலியான இராமகிருஸ்னன் அவர்களின்  பிள்ளைகளின் கல்வி செலவை முழுமையாக தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உயிரிந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு சுயத்தொழிலை மேற்கொள்ள காணி வழங்குதல் வேண்டும்.
உயிரிழந்த இராமகிருஸ்ணனின்  இறுதி சடங்கின் முழுமையான செலவை தோட்ட நிர்வாகம் ஏற்றுகொள்ள வேண்டும் என பல  நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்தனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 08 ஆம் திகதி மீண்டும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று தீர்வு எட்டப்பட்டுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
இந்த சந்திப்பில் இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல், தொழில் திணைகள ஆணையாளர், மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here