ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு பாவனைக்கான கட்டணத்தில் அதிக சலுகையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
இதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், இலங்கை மின்சார சபையினால் நாளை (07) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, 0-30 வரையான அலகுக்கு 8 முதல் 6 ரூபா வரையும், 30 – 60 வரையான அலகுக்கு 20 முதல் 9 ரூபா வரையும், 60- 90 வரையான அலகுக்கு 30 முதல் 18 ரூபா வரையும்,120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.