சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி கடந்த முதலாம் திகதி அமுல்படுத்தப்பட்ட தையடுத்து அனைத்து வகையான தொலைபேசிகள் மற்றும் அதுசார்ந்த துணைக் கருவிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் என்று அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு வருமானத்தை ஈட்டும் இறக்குமதியளர்களுக்கு சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் அறிவித்த போதும் தயாரிப்புகள் நுகர்வோரை சென்றடை கையில் அந்த வரி கிட்டத்தட்ட 5வீதமாக இருக்கும் என்றும் அதன் காரணமாக, தொலைபேசிகள் மற்றும் அதனுடன் சார்ந்த ஏனைய கருவிகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.