65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் இந்த கடன் வசதி கோரப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச். இ. கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.
யூரியா இறக்குமதி செய்வதற்காக இந்திய எக்ஸிம் வங்கியிடமிருந்து அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாதிடப்பட்டது.
சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த கடனுதவி கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, யூரியா உரம் கொள்வனவு செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்தது.