பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச கட்சியின் நல்லிணக்க செயற்பாடுகளை பொறுப்பேற்கவுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர், ஜனவரி மாதத்திலேயே நாடு திரும்ப இருந்தபோதிலும், புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவர் டிசம்பரில் வருவார் என அவரது கட்சி வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.