காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, மூக்கைச் சுற்றி கருப்பு நிறமாற்றம் போன்றவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் விரைவில் மருத்துவமனைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்குவை பரப்பும் அதே கொசுதான் சிக்குன்குனியாவையும் பரப்புகிறது எனவே கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பது மிகவும் அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.