மீண்டும் தி.மு.க தலைவராக ஸ்டாலின்

0
240

தி.மு.க தலைவராக மு.க. மீண்டும் ஸ்டாலின் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று காலை தி.மு.க பொதுக் குழுக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தில் தி.மு.க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலினும் துணை பொதுச்செயலாளராக கனிமொழியும் பொதுச் செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாராளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here