மீண்டும் தீவிர வைரஸ் பரவல் ; முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை

0
265

 நாடளாவிய ரீதியில் புதிதாக பரவி வரும் வைரஸிலிருந்து  பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளதுடன் மீண்டும் மக்கள் கவசம் அணியுமாறு எச்சரித்துள்ளது. 

இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இந்த நோய் பரவுவதாக மேலும் தெரிவிக்கும் அவர், மேலும், COVID-19 இல் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த நோயிலிருந்தும் பாதுகாக்க ஏற்றது என்றும் எச்சரித்துள்ளார்

குறித்த வைரஸிலிருந்து  பாதுகாத்துக் கொள்ளவதற்கு  பின்வரும் சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

– முகமூடியை அணியுங்கள்

– நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்

– நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்

– நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருங்கள்

– உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்

– உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள்

– உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்

உட்பட  நல்ல ஆரோக்கிய பழக்கங்களை கடைபிடிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here