மீண்டும் நாடுதழுவிய போராட்டம்.

0
328
இன்று நாடும்,நாட்டு மக்களும்  தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ள பொருளாதார,அரசியல், நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை துன்பத்துக்கு உள்ளடககியுள்ளது.
அத்துடன் நாட்டை பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்தி    அரசியல், சமூக ரீதியாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர்.
என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி தெரிவித்தது.
 “பொருத்தது போதும் வீதிக்கு இறங்கி போராடுவோம்” எனும் தொணியில் எதிர்வரும் எட்டாம் திகதி நாடு தழுவிய எதிர்ப்பு தினத்தை பிரகடணப்படுத்தி போராட்டத்தில் ஈடுப்படவுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை (05) மாலை நுவரெலியா கூட்டுறவு சங்க விடுதியில் நடத்தியது.
இதில் இக்கூட்டணி சார்பில் கலந்து கொண்ட வெ.மகேந்திரன் விளக்கம் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாடு இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்கிறது.
நாட்டு மக்கள் தினசரி வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.
இந்த நிலையில் நாளுக்கு நாள் இந்த அரசு கண்மூடித்தனமாக பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றது.
அதேபோல வரிச்சுமை,
பொருட்களுக்கான தட்டுப்பாடு என மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை இந்த அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதேநேரத்தில் இந்த வருடத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு விமோர்சனம் தேடி நாட்டை பாதுகாக்க மக்கள் இன,மொழி,பேதங்களை தூக்கியெரிந்துவிட்டு காலிமுகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்திற்கு   வலுசேர்க்கும் வகையிலும் ஆதரவு போராட்டங்களும் நாடுதழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நாட்டை பொருளாதார ரீதியாக பின்னடைவுக்கு இழுத்து சென்று குடும்ப ஆட்சியை நடத்திய ராஜபக்க்ஷகர்களின் ஆட்சியை இல்லாதொழித்து மக்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அரசியல் மற்றும் புதிய அரசியலமைப்பை நாட்டில் உருவாக்க மக்கள் இந்த  போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாட்டைவிட்டு வெளியேற்றும் அளவுக்கு  இந்த போராட்டம் உச்சம் பெற்று வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பத்தில்
இன்றைய ஜனாதிபதி ரனில்
 விக்ரமசிங்ஹவை பின்வாசல் வழியாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர வைத்தனர்.
இன்று அவர் மக்களை ஒடுக்கி இன்னும் இந்த நாட்டை நெருக்கடிக்கு இட்டு செல்லும் செயற்பாட்டை படிப்படியாக முன்னெடுக்கிறார் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடக்கும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக மேலும் பொருட்களுக்கான வரியை அதிகரிக்கச் செய்து 600க்கு அதிகமான பொருட்களின் விலையை சடுதியாக அதிகரிக்கச் செய்துள்ளார்.
மறுபக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசணைப்படி நாட்டில் அரச நிறுவனங்கள் பலவற்றை விற்பணை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் இந்த செயற்பாடுகளை தட்டிக்கேட்க முன் வரும் தொழிற்சங்கங்கள்,
வெகுஜன அமைப்புகள் எழுப்பும் குரலை ஒடுக்கவும்,நசுக்கவும் ஏறத்தாழ 40 வருடமாக நாட்டில் இருந்து வருகின்ற பயங்கரவாத தடை சட்டத்தை இந்த அரசு கையாளுகிறது.
இந்த நிலையில் நேர்மையான மக்கள் போராட்டத்திற்கு பயங்கரவாத தடை சட்டத்தை பயன் படுத்தி அவர்களை நசுக்குவதற்கு இந்த  அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கையை நாம் எதிர்த்து வருகின்றோம்.
எனவே “கோல் பேஸ்”போராட்டம் கொஞ்சம் ஓய்வு நிலையை கொண்டதை தொடர்ந்து இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் இன்னும் பாரிய பொருளாதார ரீதியாக நசுக்கி ,மேலும் துன்பகரமான வாழ்க்கையை வாழும் நிலையை இந்த ரனில்விக்ரமசிங்ஹ அரசு முன்னெடுக்கிறது.
இதற்கு எதிராக மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டியுள்ளது.
ஆகையால் தான் எதிர்வரும் எட்டாம் திகதி நாடுதழுவிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி தயாராகியுள்ளது.
அன்றைய தினத்தை ஒரு எதிர்ப்பு தினமாக பிரகடணம்படுத்தி அதில் ஒரு போராட்டத்தை நுவரெலியா நகரில் நடத்தவும் தயாராகியுள்ளோம் எனவே இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலளர் சந்திப்பில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் சார்பில் சமிந்த பியலால்,
சமுக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு தேசிய பிரச்சார செயலாளர் எஸ்.மோகன்ராஜ்,
நுவரெலியா மாநகர சபை தொழிலாளர் சங்கத்தினர்,
ஒன்றிணைந்த ஆசிரியர் சங்க செயலாளர் எச்.எம்.வி.குனவீர.மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் வீ.இந்திரசெல்வன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்திட்டனர்.
 ஆ.ரமேஸ்.டி.சந்ரு தி.தர்வினேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here