முடிசூட்டப்பட்ட இடத்திலேயே நல்லடக்கம் : உலகத்தலைவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் மகாராணிக்கு அஞ்சலி- படங்கள் இணைப்பு

0
456

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர், அபேவில் இலங்கை நேரப்படி பி.ப. 3.30 (இலண்டன் நேரப்படி மு.ப. 11.00) மணிக்கு இடம்பெறவுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரச அலுவலகங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இன்றையதினம் விசேட விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி எலிசபெத் மகாராணி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அன்றையதினம் முதல் அரச அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு விடுக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, பொதுநிர்வாக அமைச்சு குறித்த அறிவித்தலை விடுத்திருந்தது.

60 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் இறந்த பிறகு இடம்பெறும் மிகப்பெரிய அரச இறுதி ஊர்வலம் இதுவாகும். அந்நாட்டு நேரப்படி இன்று மு.ப. 6.30 மணிக்கு (இலங்கையில் மு.ப. 10.30 மணி) பின்னர் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் நுழைய பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறைவடைந்துள்ளது.

மு.ப. 11 மணியளவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) இரண்டாம் எலிசபெத் மகாராணியின் திருமணம் மற்றும் முடிசூட்டு விழா நடந்த இடமாகும். வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிலிருந்து, ராணியின் உடல் வின்ட்சர் கோட்டைக்கு (Westminster Abbey) எடுத்துச் செல்லப்பட்டு அரச மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தினர் உட்பட 2,000 இற்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் நேரடியாக கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here