முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முட்டையொன்றின் விலை 30 முதல் 35 ரூபாவிற்கு விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.