ஒஸ்கார் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்பு விடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஒஸ்கார் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். அவருடன் ஹிந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும் ஆவணப் படங்கள் பிரிவில்இ சுஷ்மித் கோஷ் மற்றும் ரின்டு தோமஸ் ஆகிய இருவருக்கும்இ எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரைட் ஒஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டெக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.
சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.