முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு முன்பை விட 90வீதம் குறைந்துள்ளதாக தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேசிய முதியோர் செயலகம் ஆறு முதியோர் இல்லங்களை நடத்தி வருவதாகவும் இதன் கட்டுப்பாட்டின் கீழ் முந்நூற்று நாற்பது முதியோர் இல்லங்கள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையின் அடிப்படையில் முதியோர் இல்லங்களுக்கு உலர் உணவு வழங்குமாறு உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.