முன்னாள் இராணுவத் தளபதி வெளியிடவுள்ள நூல் இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

0
186

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது இராணுவ வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் எழுதிய நூல் இம்மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார்.

குறிப்பாக வடக்கில் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது தொடர்பில் இதுவரை வெளிவராத பல கதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நூல் வெளியீட்டை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here