முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு யாருக்கு?

0
262

ஜனாதிபதி தேர்லில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து திருமதி குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாம் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here