முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் மனைவியான அயோமாவிடம் பத்து இலட்சம் கப்பம் கோரியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியக செயலாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கொல்னானவை சாலமுல்லையைச் சேர்ந்த சந்தேக நபர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.