“அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன்.”
உடபுஸ்ஸல்லாவ, கோணகலை மற்றும் ராகல ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர், தலைவிமார்களுடனான சந்திப்பானது இன்று (23) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாடும்போதே நான் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தேன்.
மேலும், ராகல சானிகா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இ.தொ.கா விற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.
அதேபோல், எதிர்வரும் காலங்களில் இ.தொ.கா இன் வளர்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படுவது அதன் மூலமாக எவ்வாறான வெற்றியினை பெற்றுக்கொள்வது என்று விரிவாக கலந்துரையாடினோம்.
இச் சந்திப்பின்போது, என்னுடன் இ.தொ.கா பிரதி தலைவர் கணபதி கணகராஜ், முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், காரியால உத்தியோகத்தர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.