முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதியின் 99வது ஜனன தின நினைவேந்தலும், பொருளாதார ரீதியாக அல்லலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அறிந்து உதவி அளித்து வரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கான நன்றி நவிலல் நிகழ்வும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் தலைமையில் நடைபெறும் கலைஞர் கருணாநிதி குறித்த நினைவுப் பேருரையை பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா, வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் நிகழ்த்துவார்.
கவி வாழ்த்தினை இளநெஞ்சன் முர்சுதீன், திருமதி. யோகேஸ்வரி லோகநாதன் காத்தான்குடி மௌலவி பௌவுஸ் ஜனரஞ்சக எழுத்தாளர் மலிவான கவிதாயினி சிமாரா அலி ஆகியோர் நிகழ்த்த விழாவில் பத்திரிகை ஆசிரியர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் பி. சீதாராமன் தொகுத்து வழங்குவார்.