மூன்று வருடங்களின் புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

0
273

கொழும்பு -13, கொச்சிக்கிடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று நடைபெறுகிறது. கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொச்சிக்கிடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவின் வெஸ்பர்ஸ் ஆராதனை கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

திருநாள் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் 4 மணிக்கு தமிழிலும் 5 மணிக்கு சிங்களத்திலும் 6 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. இதன் பின்னர் திருவிழா பாடற் திருப்பலிகள் காலை 8 மணிக்கு தமிழிலிலும் காலை 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

இதன் பின்னர் மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்று, இரவு 8 மணியளவில் நற்கருணை ஆசீர்வாதமும் புனித அந்தோனியாரின் ஆசீர்வாதமும் கொடுக்கப்படும். மேலும், இன்று திருவிழாவை முன்னிட்டு புனிதரின் பவனி இடம்பெறவுள்ள ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்திற்கு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here