கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று முன்னெடுக்கப்பட் ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 56 பேரில் மூவரின் நிலைமையே கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுள் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிய வருகிறது.