நீர் வழங்கல் அமைச்சின், உலக வங்கியின் கடன் ஊடாக நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் திட்டம் கடந்த புதன்கிழமை மொக்கா தோட்ட மக்களின் பாவணைக்காக திட்டத்தின் பணிப்பாளர் என்.யூ.கே. ரனதுங்கவினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பு நிதியத்தின் பொதுப்பணிப்பாளர்எல்.ஆர்.லான் பெரேரா, தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பொது பணிப்பாளர் எச்.எம்.தே. ஹேரத் மஸடகெலியா பெருந்தோட்ட கம்பனியின் உயர் அதிகாரிகள் மற்றும் திட்டத்தின் சிரேஸ்ட பொறியிலாளர் வை.எல்.டி.எல்.பண்டார ஆகியோர் உட்பட பல கலந்துகொண்டனர்.