இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,600ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 7,000 என அதிகரித்துள்ளது.
இதேவேளை, காட்டு யானைகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு கள் அதிகரித்துள்ளன என்று ஆய்வில் கூறப்பட்டது. இலங்கையின் யானைகள் தனித்துவ மான அம்சங்கள் கொண்டவை.
இலங்கை யானைகள் ஆசிய யானையின் உப இனமாகும்.
பெரும் அழிவை சந்தித்த இந்த யானை இனம், 2011 கணக் கெடுப்பின்படி 5,879ஆக காணப்பட்டன. நூறு ஆண்டுகளின் பின்னர் – அதாவது 1920ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் 7,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.