ரத்தமா ? தக்காளி? சட்னியா?- வேலு குமார் எம்.பி கேள்வி

0
197

‘நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும். ஆக தனக்கு வந்தால் ரத்தம், மற்றையவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி எனக் கூறித்திரிபவர்களுக்கு அது புரியாது.

‘ஜெனிவா’ தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணைவரும்போது, ‘நடுநிலை’ வகிக்கும் நாடுகள்கூட ‘எதிர்’ போக்கையே கடைபிடிக்கின்றன என்று அரசியல் பாடம் எடுப்பவர்களுக்கு, தற்போது ‘நடுநிலை’ என்பது மாறி விளங்குவது ஏன்? இது அரசியலில் எந்த டிசைனை சாரும்?

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் உள்ளன என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள், இப்படியான இழிநிலை அரசியலில் ஈடுபடுவது இயல்பு. இதனை திருத்திக்கொண்டு, மக்கள் பக்கம் வரவேண்டும் என்றே நான் வலியுறுத்தியுள்ளேன்.

ஒன்றும், ஒன்றும் மூன்று எனக் கூற முற்படுபவர்களுக்கு நடுநிலைகூட ஆதரவாக தெரியலாம். அது பற்றி எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here