ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக கொடுப்பனவுக்காக 2.3 பில்லியன் செலவு

0
204

ரயில்வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதில் சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க 2.3 பில்லியன்களும் செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே இவ்விடயங்களை வெளியிட்டுள்ளார். 2012 இல் வருமானம் 4.8 பில்லியன்களாகவும் 34 பில்லியன் நஸ்டமாகவும் இருந்தது. 2021 இல் வருமானம் 2.7 பில்லியன்களாவும் நஷ்டம் 47 பில்லியன்களாகவும் பதிவாகியுள்ளது. 2022 இல் வருமானம் குறைந்தது.

வருமானம் 2.6 பில்லியன்களாகும். நஷ்டம் பில்லியன் 37 களாகும். 4000 கோடி ரூபா வருடாந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சிக்கல் உள்ளது. எரிபொருள் கடனாக பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.10 கோடி ரூபாவுக்கு மேல் நாளாந்த நஷ்டம் உள்ளது.

சம்பளத்துக்கு மாத்திரம் 7.8 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவாக 2021இல் 2.3 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே திணைக்களத்தை எவ்வாறு நடத்தலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here