இன்று காலை வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பியகம பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கிப் பயணித்த கார் எச்ச ரிக்கை சமிக்ஞையை மீறி ரயில் கடவையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காரில் பயணித்த 54 வயதுடைய தந்தையும், கொழும்பில் தனியார் நிறுவனத்தில் கடமை புரியும் 34 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேல திக விசாரணைகளை எந்தேரமுல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர.