ஆளில்லாத ரயில் பெட்டிக்குள் டிக்கெட் பரிசோதகர் ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்ட 25 வயதான இரு குழந்தைகளின் தாய் ஒருவர் மூவரால் கற்பழிக்கப்பட்டதாக ரயில் பொலிஸ் தலைவர் பைசால் ஷஹ்கார் தெரிவித்துள்ளர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓடும் ரயிலில் மூன்று ஆடவர்களால் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரு சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் செவ்வாயன்று மூன்றாமவரையும் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 14,000க்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டிருப்பதோடு இது தினசரி சுமார் 11 சம்பவங்கள் பதிவாகுவதாகவும் தெரியவருகின்றது.