ரெட்டா பிணையில் விடுதலை

0
294

கைது செய்யப்பட்ட ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்னவை பிணையில் விடுவித்து கோட்டை நீதிவான் திலின கமகே இன்று ( 2)  உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறியே கைது செய்யப்பட்டார்.     சந்தேக நபர் கோட்டை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது  இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரெட்டா  எனும் ரனிந்து சேனாரத்னவை நேற்று ( 1) கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அந்த விசாரணைகளுக்கு ரெட்டா ஆஜரான நிலையில், விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சென்ற,   கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் அவரைக் கைது செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here